கோப் குழு தொடர்பில் பாராளுமன்றம் அறிவிப்பு

Date:

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு எனப்படும் கோப்(COPE) குழுவில் இருந்து இதுவரை ஐவர் மாத்திரமே உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

தாம் பதவி விலகியுள்ளதாக குறித்த ஐவர் மாத்திரமே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான் விக்கிரமரத்ன, S.M.மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளதாக அந்த பேச்சாளர் கூறினார்.

இவர்கள் தவிர, அனுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இராசமாணிக்கம் சாணக்கியன், தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட, ஹேஷா விதானகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் கோப் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை. எழுத்துமூலம் தெரியப்படுத்தும் வரையில் அவர்களின் பதவி விலகல் செல்லுபடியாகாது என பாராளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோப் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ள போதிலும், அது தொடர்பில் இதுவரை பதில் கிடைக்கப்பெறவில்லை என பாராளுமன்ற சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

31 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழுவில், ஆளுங்கட்சியின் சார்பில் 19 பேரும் எதிர்க்கட்சியின் சார்பில் 12 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.

சில உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பதினெட்டாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாகவும் குறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும், கோப் குழுவின் கூட்டத்திற்கு 5 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்பது போதுமானது என பாராளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...