நாட்டின் தற்போதைய நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்துடன் செல்லாமல் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நிபந்தனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க வருமானம் ஈட்டும் வழிகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்றும் அவர் செய்தது வரி விதிப்பு என்றும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, வருவாய் ஈட்டுவதற்கான ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதாகவும் வருவாய் ஈட்டுவதற்கான புதிய சந்தைகளில் கவனம் செலுத்துவதுதான் நடக்கும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.