அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என வெளியிட்ட கருத்திற்கு ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் அரசியல் கட்சிகளுக்கானதோ அரசாங்கத்திற்கானதோ அல்லது
அரசியல் தலைவர்களுக்கானதோ அல்ல. மக்களுக்கானது. ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் நடைபெறவேண்டும்.
ஜனாதிபதியோ அமைச்சரவையோ பசில்ராஜபக்சவோ அதனை மாற்ற முடியாது. இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானங்களை எடுக்க முடியாது.
அவர்கள் ஏதாவது காரணத்திற்காக அரசமைப்பை மீறி செயற்பட முடிந்தால் வீதிக்கு இறங்குவதற்கான வலு எங்கள் மக்களுக்குள்ளது” இவ்வாறு ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.