Sunday, December 8, 2024

Latest Posts

இன்றைய ராசி பலன்கள் – இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் !

மேஷம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.


ரிஷபம்
காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு


மிதுனம்
இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுபவிரயம் உண்டு. சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.


கடகம்
வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டுப் பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


சிம்மம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு அனுபவம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


கன்னி
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடருவீர்கள் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.


துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


விருச்சகம்
வரவு திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாகச் செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள்.


தனுசு
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மாறும். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்து வத்தால் உடல்நலம் சீராகும்.


மகரம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர்.


கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தொலைதூரத்திலிருந்து உத்தியோகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கலாம்.


மீனம்
வளர்ச்சி கூடும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு அமையும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.