மைத்திரிபால சோகத்துடன் வெளியிட்ட தகவல்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் நேற்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தன் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் எனத் தெரியவில்லை. நான் உலகை வென்று, நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நாட்டை நல்ல நாடாக மாற்றிய போதே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து. அது தொடர்பில் எந்த தடயமும் இல்லாமல் போய்விட்டதால் எனக்கு ரூ.100 மில்லியன் இழப்பீடு செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான் எதையும் திருடவில்லை; நான் குண்டு வீசவும் இல்லை. ஆனால், ரூ.100 மில்லியன் இழப்பீடு செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். முடிந்த நண்பர்கள் தமக்கு உதவுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....