27 மாணவர்கள் கைது

0
200

இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உட்பட 27 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இணை சுகாதார பட்டதாரிகளை அரச பணியில் சேர்ப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக, இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று முதல் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கியது. 

இந்த போராட்டம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், மருதானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சிற்கு செல்லும் வீதிகள் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டமோ பேரணியோ நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

இந்த தடை உத்தரவு இன்று மாலை வரை நடைமுறையில் இருப்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here