சம்பிக்கவின் ஜனாதிபதி கனவு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பனாகொட கெரமுல்லையில் கடந்த கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணவக்க மேலும் கூறியதாவது:

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒருமித்த நடவடிக்கை’ கொள்கை அறிக்கை குறித்து தற்போது பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

மேலும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியை அமைக்க உள்ளோம். இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணி. அந்த கூட்டணியின் வேட்பாளராக என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் சொன்னால், அந்த சவாலை ஏற்றுக்கொள்வேன்.

என்னிடம் ஒரு குழு உள்ளது. என்னால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...