வடக்கில் தமிழ் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

0
23

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் நேற்றைய தினம் (28) காலை இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் இணைத் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சி. ரவீந்திரன் (வேந்தன்), முருகேசு சந்திரகுமார் மற்றும் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here