மட்டக்களப்பு வருகிறது அம்மான் படையணி!

Date:

அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...