இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக செந்தில் தொண்டமான் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொட்டக்கலை சிஎல்ப் வளாகத்தில் இன்று காங்கிரஸின் தேசிய சபை கூடியது.
இதில் இ.தொ.காவின் தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமானும் தவிசாளர் பதவிக்கு மருதப்பாண்டி ராமேஸ்வரனும் போட்டியிட்டனர்.
இதன்போது போட்டியின்றி செந்தில் தொண்டமான் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன் ராமேஸ்வரன் தவிசாளராக தெரிவானார்.
இதேவேளை கட்சியின் பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் தொடருவார்.