இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பலநாள் மீன்பிடி படகு ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையின் போது, அந்த படகில் இருந்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த சட்டவிரோத பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அந்த படகும், கைது செய்யப்பட்ட நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர்.
கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
