வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

0
138

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வைத்திய கலாநிதிகளான சுகாஸ்கரன் வவுனியா மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், வினோதன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம்  வவுனியா மாவட்ட  வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here