சுகாதாரத் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ‘டெட்’ என்ற போக்குவரத்துக் கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்று தமக்கும் கிடைக்கவுள்ளதாகவும் அதில் 50 வீதம் மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.