இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளின்படி, ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலோ அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பார்.
அப்படியான அறிவித்தல் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனை பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். கால நீடிப்பு பாராளுமன்றத்தால் தேவை ஏற்பட்டால், தீர்மானம் மூலம் அமுல்படுத்தப்படும்.
இந்தக் காலத்தில் பத்திரிகைகள் பிரசுரங்கள் அரச அதிகாரியின் (சென்சாருக்கு) தணிக்கைகக்கு உட்பட வேண்டும். இதன்படி மக்கள் கூடுவது தடை. காவல்துறைக்கு சந்தேகத்தின் கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரம் போன்றவை அமுலாக்கம் ஆகும்.
இந்த அவசரகால சட்டம் குறித்து நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது விடயங்கள் வருமாறு
1.நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை ஆகிய தரப்பின் எந்தவொரு உறுப்பினராலும், எந்த நேரத்திலும் யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.
2.கைதுக்கு முன்பதாக பின்னதான விசாரணை என்ற கதைக்கே இடமிருக்காது.எந்த வழியிலும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.
3.இதன்போது யாராவது தப்பிப்பதற்கு முயன்றால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.
4.ஒருவரை சந்தேக நபராக கருதுவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம், கடமையிலுள்ள எந்தவொரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அதிகாரம் உண்டு.
5.கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இலங்கையைப் பொறுத்தவரை இல்லை என்பது முக்கியமான விடயம்.
6.தேவை ஏற்படின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான அதிகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்க்கு உண்டு.
இலங்கையில் நீண்டகாலம் விசாரணைகள் இல்லாமல் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் அடங்குவோர் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் அவசரகாலச் சட்டம் (State of emergency in Sri Lanka) அமுல்படுத்தப்பட்ட காரணங்களும், அவை அமுலில் இருந்த காலங்களும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன
முதலாவது அவசரகாலச் சட்டம்
கலவரங்கள்
பிரதமர் கொலை
சத்தியாக்கிரகம்
வேலை நிறுத்தம்
நாணயத் தாள்களை அழித்தல்
ஜே.வி.பி. புரட்சி
இயற்கை அனர்த்தம்
யாழ்ப்பாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள்
சர்வதேச நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக இந்த சட்டம் இலங்கையில் நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று அதிகாலை (02) அமுல்படுத்தப்பட்டுள்ளது.