- நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையினூடாக இதனை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் பொது அவசர நிலையை பிரகடனம் செய்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நாடு தழுவிய ரீதியில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.