இந்தியாவில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியது போன்று, இலங்கையிலும் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கான மிகவும் வலுவான சட்டமூலமொன்றை கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய நினைக்கும் ஒவ்வொரு தலைவரையும் திருடன் என முத்திரை குத்தி அரசியலில் இருந்து அகற்றி விட்டு நாட்டை அழிப்பவர்களுக்கு இந்த சட்டத்தின்மூலம் தண்டனை வழங்கப்படும்.
நாட்டுக்காக உழைக்கும் தலைவர்களை எந்த ஆதாரமும் இல்லாமல் திருடர்கள் என்று முத்திரை குத்துவதால், நாட்டுக்காக உழைக்க எவரும் முன்வருவதை தடுப்பதே இந்த செயல்பாடுகளின் நோக்கமாகும். ஆகவே இதற்கு தகுந்த சட்டமொன்று அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S