விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவசர அமைச்சரவை கூட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில மணிநேரங்களில் முக்கியமான ராஜினாமாக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன