கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்த சில மணி நேரங்களின் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்