கச்சதீவு விடயத்தில் பேச எதுவுமில்லை – அலி சப்ரி

Date:

கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் கருத்தாடல் இடம் பெறவில்லை. கச்சதீவுப் பிரச்சினை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி தற்போது மீண்டும் கலந்துரையாடல் அவசியமில்லை இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. கச்சதீவு விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கச்சதீவை மீட்பது தொடர்பில் கருத்தாடல் இடம் பெறவில்லை. கச்சதீவை வழங்கியது தொடர்பில் யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது அந்த நாட்டில் (இந்தியாவில்) உள்ளக அரசியல் களத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன்போது கச்சதீவை மீளப்பெறுவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்ட பிரச்சினையாகும். எனவே, அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் அவசியம் இல்லை – என்றார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...