கிளிநொச்சியில் மக்களால் துரத்தப்பட்ட அமைச்சர் டக்ளஸ்

Date:

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அவசர அவசரமாக உந்துருளியில் ஏறி தப்பிசெபெற்றுள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க சென்ற நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார். இதன்போது உந்துருளி ஊடாகவே டக்ளஸ் தேவானந்தா திரும்பிச்சென்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...