சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு செய்ததற்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவரை குறிவைத்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமுதித தமது யூடியூப் சேனலின் ஊடாக பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து பல்வேறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
N.S