ஜனாதிபதி ராஜினாமா செய்ய மாட்டார் -ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0
196

ஜனாதிபதி எந்த வகையிலும் ராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் தானும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக எதிர்க்கட்சியின் அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதிக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளதாகவும் வீதிகளில் 75 ஆயிரம் 80 ஆயிரம் பேர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுகின்றனர். எமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் மக்கள் 69 லட்சம் வாக்குகளை வழங்கி தெரிவு செய்துள்ளனர்.  எதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அத்துடன்  ஜனாதிபதி எந்த வகையிலும் பதவி விலக மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here