ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
“அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடம்பெற வேண்டும் எனவும் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.”
எவ்வாறாயினும், இது தற்போதைக்கு சாத்தியமில்லை எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் அரசியலமைப்பின் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 42 ஆளும் கட்சி எம்.பி.க்கள் சுயேச்சையாக உள்ளனர்என்பதுவும் குறிப்பிடத்தக்கது