அரசாங்கக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை எவ்வாறு தணிக்க நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 31ஆம் திகதி முதல் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் தற்போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதியை வெளியேறுமாறு வற்புறுத்திய போதிலும் அது நடக்காது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.