ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மொட்டுக்கட்சி ஆரம்பமானது. இந்த கட்சியை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்பதே தற்போதைய அரசின் அன்றைய மனநிலை.
அப்போது நல்லாட்சி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது. பொருட்களின் விலை குறைவு உட்பட மக்களிடம் பணமும் இருந்தது. காசு அச்சிடவுமில்லை
அப்படி இருக்கும் போது மொட்டுக்கட்சியை நிலைநாட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் சேர்ந்து உடைய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச முனைந்தார்கள்.
இவர்களின் நோக்கமே முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்கள மக்களை வெறியுண்டாக்கி, சிங்கள மக்களை வாக்களிக்கச் செய்து மொட்டுக் கட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.
ஆனால் அரசு ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்