விமான நிலையத்தில் பாதுகாப்பு கமரா அமைப்புகளை மாற்றவில்லை. தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தி பயணிகள் மற்றும் உயரதிகாரிகளின் புறப்பாடு நடைமுறைகள் குறித்து பொது மக்களை தவறான செய்திகள் சவெளிவந்தவண்ணம் உள்ளது எனினும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, கடுமையாக மறுக்கிறோம் எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் கண்ணியம் மற்றும் அதன் பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தது .