துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL.225 இலக்கம் கொண்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 06.25 மணிக்கு குறித்த விமானம் துபாய் நோக்கி பயணிக்கவிருந்தது. சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக இன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்ட குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானிக்கு முன்பாகவுள்ள கண்ணாடியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய கட்டுபாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
N.S