பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்தால், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த உட்பட சில பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
N.S