மேர்வினுக்கு இன்றும் பிணை இல்லை

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதே சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....