எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான தருணத்தில் பொதுஜன பெரமுனவுடன் நிற்பதால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.