ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கொழும்பு காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு அருகில் இருபுறமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை காலி முகத்திடல் பகுதியில் இணைய வசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.