நாட்டின் தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையே இன்று பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் பின்னர், இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறாததால், தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு மார்ச் 09ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னரும் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின் அவர்கள் தேர்தலை கோரும் உள்ளூராட்சி மன்ற அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்படு சம்பளம் வழங்கப்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு நீதி வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தரப்புக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மிகவும் நட்பு ரீதியில் நடந்ததாக அவர் கூறினார்.