இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு எப்போதும் இல்லை. பலமுறை இதனை நான் கூறியுள்ளேன். மீண்டும் மீண்டும் கூறுகிறேன். அவ்வாறான எண்ணம் எமக்கு இல்லை.
சோஃபா ( SOFA Agreement) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மறுமதிப்பீடு செய்யவோ அமரிக்காவுக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ராயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க குழு கடந்த பெப்ரவரி மாதம் முக்கிய இலங்கைக்கு வந்திருந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடவே இந்த குழு இலங்கைக்கு வந்திருந்தது.
இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற கோணத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
N.S