புத்தாண்டின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிப்பு!

0
161

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிக்க தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. ஒரு நபரை திடீரென ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்க முடியாது. அதற்கான நேரம் இன்னும் உள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க சிறந்த மற்றும் நிலையான வேலைத்திட்டத்தை நாம் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். அத்தகைய திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்கக்கூடிய ஒரே கட்சி பொதுஜன பெரமுன மட்டுமே என்று நான் நம்புகிறேன்.

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டின் பின்னர் எமது அரசியல் பிரச்சாரத்தை வலுப்படுத்துவோம். புத்தாண்டின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நபர் யாரென வெளிப்படுத்துவோம் என்றார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் ரஞ்சித் பண்டார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் எவ்வித தவறும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here