நாடாளுமன்ற உறுப்பினரான ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாந்த பண்டார பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிட்டு குருணாகலை மாவட்டத்திலிருந்து தெரிவாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.