கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நிமித்தம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளுக்காக தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய 375 மில்லியன் ரூபா கடனை செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரிக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
திறைசேரி ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ரூபா 188 மில்லியனை விடுவித்திருந்த போதிலும், வாக்குச் சீட்டுகள் அச்சிடுதல், இதர செலவுகள் என ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளுக்காக மேலும் 375 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.
புதிய திகதி எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
N.S