அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

Date:

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியினர்  மேற்கொண்ட முயற்சியால் நேற்று (11) பிற்பகல் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர். மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனத் கூறிக்கொண்ட ஒரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, பூட்டப்பட்டிருந்த வைத்தியசாலைத் தலைவரின் அலுவலக அறையை பலவந்தமாக உடைத்துத் திறக்க ஆதரவாளர்கள் குழுவினர் பலமுறை முயற்சித்துள்ளனர்.

அவர்களை பொலிஸார் தடுத்தபோது, பொலிஸ் அதிகாரிகளுடனும் மோதல் ஏற்பட்டதுடன், சில அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாக அதிகாரத்தை தேர்தலின்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியின் குழுவினர் கடந்த 2ஆம் திகதி முதலே பலமுறை முயற்சித்துள்ளனர். எவ்வாறாயினும், இன்றைய இந்தச் சம்பவத்தினால் வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...