இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என கூறப்படுகிறது.
அந்த காலத்தில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது நெருங்கிய ஆலோசகரின் வீட்டிற்கு சென்று சிலருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன உள்ளிட்ட சிலரும் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு மற்றும் உரையாடல் நடந்து கொண்டிருந்த வேளையில், பந்துல ரணிலிடம், “சர், இந்த புத்தாண்டில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவிக்க அழைத்தபோதும் உங்களைப் பற்றிப் பேசினேன். நாட்டில் பெரிய நெருக்கடிகள் உருவாகும் நிலை உள்ளது. அதனால் உங்களை பிரதமராக நியமித்து புதிய திட்டத்துடன் முன்னேற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறினேன்” என்று சொன்னாராம்.
அதை கேட்ட உடன் ரணில் கடும் கோபத்தில்,
“உங்களுக்கு பைத்தியமா பந்துல? எனக்கு கோட்டாபயவுடன் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு தொடர்பு இருப்பது மஹிந்தவுடன் மட்டுமே. இப்படிப்பட்ட விஷயங்களை செய்யாதீர்கள். என்னைப் பற்றி கோட்டாபயவுடன் பேசவேண்டாம்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்த திடீர் எதிர்வினையால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, பின்னர் வேறு தலைப்புக்கு உரையாடலை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள், 2022 மே 12 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய அரசில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
பந்துல மீது ரணில் கோபப்பட்ட அந்த நேரத்திலேயே, அரசில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஏற்கனவே நடைபெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுவே ரணிலின் போக்கு என பலரும் கூறினர்.
