அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசாங்கத்தின் இந்த கொள்கை ஏப்ரல் 12, 2022 வரை நிலுவையில் உள்ள கடன்களுக்குப் பொருந்தும், அதன் பிறகு புதிய கடன் வசதிகள் இந்தக் கொள்கைக்கு உட்பட்டது அல்ல, வழக்கம் போல் வழங்கப்படும்.