ராஜபக்ஷக்களுக்கு எதிராக களமிறங்கி உண்ணாவிரதத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

0
104

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் ஆரம்பித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு கோரி 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வாரம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரை தம்மிக்க பிரசாத் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here