இன்று நண்பகல் 1 மணிக்கு பின்னர் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகிக்கும் அளவு மட்டுப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும் கார், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும் மாத்திரம் பெற்றோல் டீசல் விநியோகிக்கப்படும்.
பஸ், அத்தியாவசிய தேவை வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.
இதேவேளை, தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்திலும் பெற்றோல் மற்றும் டீசலுக்கு வாகனங்கள் மணித்தியாலக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.