பிள்ளையான் மருத்துவமனையில்!

0
265

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், தற்போது விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், “பிள்ளையான்”, சிறை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் ஒரு ஆண்டுக்கு அருகிலான காலம் குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த பிள்ளையான், கடந்த 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை ரிமாண்ட் சிறையில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here