சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடும் வகையில் காலி முகத்திடல் வளாகத்தின் அழகை பேணுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக, துறைமுக அதிகாரசபை காலி முகத்திடல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, அதிகாரசபையால் ரூ. 220 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் கடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களை மீட்பதற்காக ரூ. 6.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.