கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டத்திற்கு இதொகா அழைப்பு

0
260

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டமொன்று நாளை (19) நடைபெற உள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நாளை காலை 10 மணி முதல் அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாக தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்காது அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் கம்பனிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராகவும் இந்த அறவழி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here