சமகி ஜன பலவேகயயின் (SJB) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என SJB ன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த பிரேரணையை செவ்வாய்கிழமை கையளிப்போம், தவறினால் புதன் கிழமை பிரேரணையை கையளிப்போம், இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் அது கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதற்கிடையில் எம்.பி.க்களை தன் பக்கம் இழுக்க அரசாங்கம் டாலர் லஞ்சம் தருவதாகவும் அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் தொகை இரண்டு மில்லியன் டாலர்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்