ரம்புக்கனையில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அங்கிருந்து கிடைக்கும் காணொளிகள், போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததைக் காட்டுகிறது. இதற்கு காவல்துறைதான் காரணம் என்று ஒரு எதிர்ப்பாளர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து 15 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.