எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு (2328/05) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர், விநியோகஸ்தர் மற்றும் வர்த்தகர் என எவரும் பட்டியலிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விலைக்கு விற்கவோ, வழங்கவோ, பகிர்ந்தளிக்கவோ கூடாது என்று நுகர்வோர் விவகார ஆணைக்குழு வர்த்தமானியின் ஊடாக உத்தரவிடுகிறது.
அதன்படி, வெள்ளை முட்டை கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.880 ஆகவும், பழுப்பு முட்டை ஒரு கிலோவின் விலை ரூ.920 ஆகும். அதிகபட்சமாக 44 ரூபாவுக்கே வெள்ளை முட்டையொன்றை விற்பனை செய்யமுடியும் என்பதுடன் பழுப்பு நிற முட்டையை 46 ரூபாவுக்கு அதிகபட்சமாக விற்பனை செய்யமுடியும் எனவும் குறித்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை இன்றுமுதல் (ஏப்ரல் 20) அமலுக்கு வரும் எனவும் நுகர்வோர் விவகார ஆணைக்குழு கூறியுள்ளது.
N.S