சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதே தற்போதைய நிலைமைக்கு சிறந்த தீர்வு என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் 25ஆம் திகதி தேசிய அரசாங்கத்திற்காக ஜனாதிபதி முன்வைக்கும் பிரேரணை சரியான பயணத்திற்கு சரியான முறையில் முன்வைக்கப்படுமாயின், தாம் தனித்து அல்லது அதனுடன் இணைந்து நிற்பேன் என்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், இந்த தருணத்தில் நாட்டின் நலனுக்காக கட்சி அரசியலுக்கு பதிலாக மக்கள் அரசியலை நாட வேண்டும் என்றார்.