நாவலபிட்டி நகரிலிருந்து பொகவந்தலாவ நகர்வரை நடை பயணம் மேற்கொண்ட பாடசாலை மாணவி!

0
234

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15வயது சிறுமி நாவலபிட்டி நகரில் இருந்து நடைப்பயணமாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் வரை வந்தடைந்தார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு நாவலபிட்டி நகரில் பயணத்தை ஆரம்பித்த இந்த மாணவி நேற்று மாலை 4.30மணியளவில் பொகவந்தலாவ நகரத்தை வந்தடைந்தார்.

09 மணித்தியாலயத்தில் தனது நடைப்பயணத்தை முடித்த இந்த சிறுமி நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை, வட்டவலை, அட்டன், டிக்கோயா, நோர்வூட், டியன்சின் ஆகிய நகரங்களின் ஊடாக பொகவந்தலாவ நகரை வந்தடைந்தார்.

இந்த சிறுமிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு
குறித்த சிறுமி வருகை தந்தவுடன் பொன்னாடை போற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சிறுமி பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசியக் கல்லூரியில் தரம் 10ல் கல்வி கற்று வருவதோடு பெருந்திரளான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் சிறுமிக்கு ஆதரவு
வழங்கி இருந்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தனது நடைப்பயணத்தை கொழும்பில் இருந்து பொகவந்தலாவ வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜெயசீலன் நிதர்சனா குறிப்பிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here