அக்குறணை குண்டுவெடிப்பு புரளி கிளப்பிய நபர் சிக்கினார்!

0
188

அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் இன்று (ஏப்ரல் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு 118 அவசர முறைப்பாடு இலக்கத்துக்கு அழைப்பு விடுத்த சந்தேக நபர், புனித ரமழானில் முஸ்லிம் பக்தர்களின் தொழுகையின் போது அக்குறணையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலியான தகவலை அதிகாரிகளுக்கு அநாமதேயமாக வழங்கியுள்ளார்.

வெடிகுண்டு பீதியை அடுத்து அக்குறணைக்கு விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) இவ்விடயம் தொடர்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, அக்குரணை பிரதேசத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அண்மைய அறிக்கைகளை தெளிவுபடுத்தினார்.

குறித்த பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி அவசர பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here